சம்பாதிக்கும் பணத்தில் அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுக்க ஆசைப்பட்ட பூவையார்! வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா? கவலையில் ஈழத் தமிழர்கள்

Report
4604Shares

பிரபல நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தினை பெற்ற பூவையாருக்கு 10 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேடையில் பூவையார் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வெற்றியை நான் நினைத்து கூட பார்க்க வில்லை, எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. அது மாத்திரம் இல்லை என் வெற்றிக்கு காரணமாக இருந்த எனது உறவுகளுக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஈழத்து சிறுமி சின்மயி வெற்றி பெறவில்லை என்று ரசிகர்கள் கவலையில் உள்ளனர். எனினும் , அவரின் திறமைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பூவையாருக்கு முதலிடம் கிடைக்கும் என்று ரசிகர்கள் பலர் எதிர்ப்பார்த்திருந்தனர். முதலிடம் கிடைக்க வில்லை என்று கவலை ஒரு புறம் இருந்தாலும் மூன்றாம் இடத்தினை பெற்று கொண்ட பூவையாரின் வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

அது மாத்திரம் இல்லை, முதலில் அதிகம் சம்பாதிக்கும் பணத்தில் அம்மாவுக்கு அழகிய புடவை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பூவையார் அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். தற்போது அவரின் கனவு நினைவாக போகின்றது.

180495 total views