சூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா?

Report
2641Shares

பிரபல‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ இன்று இறுதிச்சுற்றை எட்டியது. இதுகுறித்து சேனல் தரப்பினர் கூறியதாவது: கடந்த 2006 -ம் ஆண்டில் ‘தமிழகத்தின் குரல் தேடல்’ எனத் தொடங்கிய இந்நிகழ்ச்சி, 10 ஆண்டுகளைக் கடந்து இசைத் துறைக்கு பல பாடகர்களைத் தந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரீட்சைகளையும் கடந்து வந்து, இறுதிப் போட்டிக்கு தேர்வான போட்டியாளர்கள் - அஹானா, சின்மயி, அனுஷியா, சூர்யா, ஹ்ரித்திக் மற்றும் பூவையார் ஆவர். இவர்கள் தற்போது அந்த பிரம்மாண்ட மேடையில் பாட தீவிரப் பயிற்சி எடுத்து வந்த நிலையில் இன்று யார் வெற்றியாளர் என்பதை தெரிந்துள்ளது.

ரித்விக் முதல் பரிசாக 50 லட்சம் மதிப்புள்ள வீடும், இரண்டாவதாக சூர்யா 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும், மூன்றாவது பரிசை பூவையார் 10 லட்சம் ரூபாயையும் பரிசாக பெற்றுள்ளார்.

loading...