பொது இடத்தில் நடிகைக்கு ஷூ லேஸை கட்டிவிட்ட கணவர்...

Report
428Shares

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் ஷூ லேஸை அவரின் கணவர் கட்டிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்தார். சோனம் தனது கணவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் சோனம் கபூர் தனது கணவருடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சோனம் மற்றும் ஆனந்த் ஆகியோர் ஒரே மாதிரியான ஷூ அணிந்து வந்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் சோனம் கபூரின் ஷூ லேஸை ஆனந்த் கட்டிவிட்டார். பொது இடத்தில் கவுரவம் பார்க்காமல் ஆனந்த் செய்த காரியத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் வியந்தனர்.

ஆனந்த் சோனமின் ஷூ லேஸை கட்டிவிட்ட போது சிலர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

அதை பார்த்த ரசிகர்கள் சோ கியூட், ரொமான்டிக் என்று பாராட்டியுள்ளனர். முன்னதாக சாக்ஷி தனது கணவர் தோனியை தனது ஷூ பக்குலை மாட்ட வைத்ததை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

18013 total views