படம்பார்க்க ஸ்ரீதேவியின் மகள் அணிந்து வந்த ஷு... விலையைக் கேட்டு ஷாக் ஆகிடாதீங்க!

Report
1086Shares

ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி அக்கா ஜான்வியின் விலை உயர்ந்த காலணிகளை அணிந்துள்ளார்.

அபிஷேக் வர்மன் இயக்கத்தில் மாதுரி தீக்ஷித், சஞ்சய் தத், வருண் தவான், ஆலியா பட், சித்தார்த் ராய் கபூர், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்த கலன்க் படம் கடந்த 17ம் தேதி வெளியானது.

முன்னதாக பாலிவுட் பிரபலங்களுக்காக அந்த படம் பிரத்யேகமாக போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்க்க ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் வந்திருந்தார். அவர் அணிந்திருந்த ஷூ அக்கா ஜான்வி உடையது. அந்த ஷூவை ஜான்வி பலமுறை அணிந்திருக்கிறார்.

ந்த ஷூவின் மதிப்பு ரூ. 1.37 லட்சம் ஆகும். அடேங்கப்பா இவ்வளவு விலை உயர்ந்த ஷூவா என்று நினைக்கலாம். குஷியிடம் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நைக்கி ஷூ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குஷியின் உடைகளை ஜான்வி அணிவார். ஜான்வியின் உடைகளை குஷி அணிவார். ஆனால் அனுமதி இல்லாமல் அடுத்தவரின் உடையை எடுத்தால் வீடே இரண்டாகிவிடுமாம்.

ஒரு முறை ஜான்வி குஷிக்கு தெரியாமல் அவர் உடையை அணிந்து வெளியே செல்ல அன்று பெரிய சண்டை நடந்ததாம்.

loading...