அரண்மனை கிளி மதுமிதாவின் அக்கா இந்த நடிகை தானா..? புகைப்படம் இதோ

Report
838Shares

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `அரண்மனைக்கிளி’. இந்த சீரியலில் ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடிப்பவர் மதுமிதா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `குலதெய்வம்’ சீரியலில் நடித்தவர். அதுமட்டுமல்லாமல் ஆர்த்தியின் அக்கா ஶ்ரீ பிரியாவும் சின்னத்திரை நடிகை தானாம்.. மதுமிதாவின் பர்சனல் பக்கங்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

குலதெய்வம்’ சீரியலுக்கு ஆடிஷன் நடக்குதுன்னு கேள்விபட்டு என் அக்கா போகலாம்னு சொன்னாங்க. அப்போ சரி நாமலும் டிரை பண்ணி பார்க்கலாமேன்னு ஆடிஷன் அட்டெண்ட் பண்ணோம். நாங்க ரெண்டு பேருமே ஆடிஷன்ல செலக்ட் ஆனோம். குலதெய்வம் சீரியலில் நானும், என் அக்காவும் நடிச்சோம்.

அந்த சீரியல் முடிஞ்சதும் ராஜ் டிவியில் ஒரு சீரியலில் நடிச்சேன். இப்போ விஜய் டிவியில் `அரண்மனைக்கிளி’ சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நமக்கெல்லாம் நடிப்பு எப்படி செட்டாகும்னு நினைச்சேன். இப்போ நடிக்காம இருக்க முடியாதுங்குற அளவுக்கு சேன்ஞ் ஆகிட்டே.

குலதெய்வம் சீரியலில் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். அந்த டீம்ல சாந்தி அம்மா கூட மட்டும்தான் இப்போ வரைக்கும் குளோஸா இருக்கேன். அவங்க சீரியலில் எனக்கு அம்மாவாக நடிச்சாங்க. ஆனா, நிஜத்திலும் அப்படித்தான் என்கிட்ட பழகுவாங்க. அவங்க பொண்ணு மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் சொல்லிக் கொடுப்பாங்க.

என் அக்கா ஶ்ரீ பிரியா. குலதெய்வம் சீரியலில் கீர்த்தி கேரக்டரில் நடிச்சவங்க. இப்போ `கல்யாண வீடு’ சீரியலில் ரோஜா கேரக்டரில் நடிக்கிறாங்க. அக்காவும் நானும் மீடியாவுக்குப் புதுசுங்குறதுனால நிறைய விஷயங்களை கத்துக்கணும்னு நினைப்போம். ரெண்டு பேரும் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதிப்போம். எங்க ரெண்டு பேருக்கும் பலம்னா அது எங்க அம்மாதான்! எங்க ரெண்டு பேருடைய வளர்ச்சியில் அவங்களுடைய பங்கு அளவிட முடியாதது என்று கூறியுள்ளார்.

loading...