ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபல கவர்ச்சி நடிகை.. வைரலாகும் புகைப்படம்..!

Report
615Shares

பிரசாந்த் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ‘ஜாம்பவான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேக்னா நாயுடு. அதன் பின்னர் வீராசாமி , நாயுடு. பந்தயம், குட்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ஒரு சில படங்களில் ஐட்டம் டான்ஸராகவும் நடனம் ஆடி உள்ளார். சமீபத்தில் இவர் திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் நடிகை மேக்னா நாயுடு. தெலுங்கு படங்களில் அறிமுகமான மேக்னா, அதன் பிறகு கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்தார். சிம்பு நடித்த சரவணா படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு பல படங்களில் நடித்தார், சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிலேயே செட்டிலாகி விட்டார் என்ற செய்தி வெளிவந்தது. அதன்பிறகு மேக்னா படங்களில் நடிக்கவும் இல்லை. தற்போது, டென்னிஸ் வீரர் லூயிசை 2016ம் ஆண்டிலேயே ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் தற்போது வாழ்ந்து வருவதாகவும் அறிவித்துள்ளார்.

தனது திருமணம் குறித்து பேசியுள்ள மேக்னா நாயுடு ‘எனது தந்தை டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலம் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் அறிமுகமானார். என்னை விட அவர் பத்து வயது மூத்தவர். சமூக வலைத்தளம் மூலம் எங்கள் நட்பு தொடர்ந்தது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. கடந்த 2016 டிசம்பர் 25-ந் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இந்து முறைப்படி ரகசிய திருமணம் செய்துகொண்டோம் என்று கூறியுள்ளார்.

19421 total views