டைமிங்கனா இது டைமிங்.... ஜஸ்ட் 1 நொடிக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு!..

Report
292Shares

வாழ்க்கையோட சுவாரஸ்யமே நேரம் தான். நேரத்த நாம ஜெயிச்சிட்டா சாகா வரத்த ஆடைஞ்சிடலாம். ஆனா, அது ரொம்ப ஈஸியான காரியம் இல்ல. இன்னிக்கி, டைம் டிராவல், சாகா வரம்னு சிலர் தேடி ஓடிட்டு இருக்காங்க. ஆனா, அவங்களுக்கு நேரம், வாழ்க்கையோட சுவாரசியம் ஒரு நொடியில நாம் என்ன பண்றோம், அந்த செயல், காரியத்தின், தாக்கத்தோட.. அத தொடர்ந்து நம்ம வாழ்க்கை எப்படி பயணிக்கிதுங்கிறதுல தான் இருக்குனு தெரியிறது இல்ல.

இங்கு நொடியில் நடந்த சில அசம்பாவிதங்களை புகைப்படத்தில் பார்த்து ரசிக்கலாம் வாங்க...

பள்ளி நாட்களில் ப்ரேக் டைம், உணவு இடைவேளை போன்ற நேரத்தில் நமது நண்பர்களின் தலையில் அவர்கள் எதிரபாராத நேரத்தில் இப்படியாக தண்ணீரை ஊற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவோம். ஆனால், அந்த ஒரு நொடி, தன் மேல் யாரோ நீர் ஊற்ற போகிறார்கள், ஆனால் தப்பிக்க முடியாது என்ற சூழலில் அவர்களது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை கண்டுள்ளீர்களா? ஒருவேளை இப்படியாக தான் இருக்கும் போலே!

அட! இதென்ன... நம்மள நோக்கி வருது...

அதான் முகத்துக்கு நேரா வருதுன்னு தெரியுதுல்ல... தப்புச்சு ஓடுறது விட்டுட்டு... அப்பறம் என்ன வெறிக்க, வெறிக்க பார்த்துட்டு இருக்க... இப்ப யாருக்கு நஷ்டம்... உனக்கு தான் மூக்குல பிளாஸ்திரி போட்டிருப்பாங்க!

ஓ மை காட்! மழை காலம் ஒன்னு வந்துட்டா போதுமே... கார்ல போறவங்க எல்லாம் ரோட்டுல நடந்து போறவங்க மேல சேறு வாரி அடிச்சுட்டு போய்டுவீங்க. நல்ல வேளை பிள்ளைங்க... துணிமணி கொஞ்சமா போட்டதுனால தப்பிச்சிடுச்சுங்க... அப்பறம் யாரு சோப்பு பவுடர் த்வாங்கி மறுக்கா துணி துவைக்கிறது...

தட் காளை மைண்ட் வாய்ஸ்...

இரத்த ஆறு ஓடுற பூமியில சில்வண்டுகளுக்கு என்னடா வேலை? ஓங்கி அடிச்சா பத்தரை டன் வெயிட்டு பாக்குறியா... பாக்குறியா... பாக்குறியா...

சர்வ நாசம்னு சொல்வாங்களே அது இது தான். சன் பாத் எடுக்க சொன்னா... உங்கள யாரு புதைஞ்சு விளையாட சொன்னது. நல்ல வேளையா சுனாமி, கினாமி வரல.... அப்பறம் ஒரேடியா டைரக்ட் மர்டர் கம் அடக்கம் ஆயிருக்கும். இனிமேலாவது சூதானமா இருந்துக்குங்க பிள்ளைங்களா!

எதுக்க்க்க்க்கு!!! நமக்கு வர மாதிரி பட்டன் வெச்சது, வைக்காதது, தையல் பிரிஞ்சதுன்னு பார்த்துட்டு போக வேண்டியது தானே! எதுக்கு இந்த வீர சாகசம். கண்டிப்பா மூஞ்சி, மொகரை பெயர்ந்திருக்கும்... ஸ்டண்ட் பண்றது முக்கியமில்ல... அத சரியா பண்ணும்.

நாய் மைன்ட் வாய்ஸ் - "யூ கோ மேன், வை மீ...?"

"நீ போய் விழுந்து தொலைய வேண்டியது தானே... என்னையும் சேர்த்து ஏண்டா தூக்கி போட்ட... நான் எல்லாம் ஒரு செம்பு தண்ணி உடம்புல பட்டாலே ஒரு கிலோ மீட்டர் ஓடுற ஃபேமிலி. என்னைய போய் இம்மாம்பெரிய ஸ்விமிங்ஃபூல்ல தூக்கி போடுறியே... இதெல்லாம் உனக்கு தகுமா? நீ எல்லாம் வாழ்நாள முழுக்க சிங்களா தாண்டா இருப்ப..."

சொனமுத்தா மொத்தமா போச்சா...

அங்கிள் நடந்து வரும் போது அவர முந்திட்டு வர தொந்திய பார்க்கும் போது காலம், காலமா பீர் குடிக்கிற பரம்பரை சேர்ந்தவர்ன்னு தெள்ள தெளிவா தெரியுது. என்ன பிரயோசனம்... ஒழுங்கா பீர் தூக்கிட்டு வர தெரியலேயே... மூன்று பீர் ரெண்டு கட்டிங்... ஆகமொத்தம் சில பல டாலர்கள் ஸ்வாஹா...!!!

எக்ஸ்கியூஸ் மீ... குதிர உங்கள தூக்கிப் போட்டது மண் தரையில... ஏதோ ஆகாசத்துல பறக்குற மாதிரி கை ரெண்டையும் விரிக்கிறேலே... கீழே விழுந்தா முப்பத்தி ரெண்டுல நாலஞ்சு காணாமா போயிடும் பரவாயில்லையா...

தட் குதிரை எங்கிட்டா போதாதே... பாடுற மொமன்ட்...

தடித் தாண்டவராயா... எருமை மாதிரி இருந்துகிட்டு என்மேல குதித்து விளையாடுற நீ ராஸ்கல்... போ.. நீ எல்லாம் நடந்து வந்தா தான் கொழுப்பு குறையும்... இதுல கவ்பாய் தொப்பி வேற...


தண்ணியில நடக்குறதே பெரிய சாதனையா கருதுறீங்க... நான் எல்லாம் தண்ணி மேல ஓடுவேன், டைவ் அடிப்பேன், படுத்து உருளுவேன்... நாங்க எல்லாம் அப்பவே அப்படி... போங்கப்பு அந்தாண்ட....

போச்சே... போச்சே... போச்சே... இனி மறுக்க பைக்குக்கு எப்படி செலவு பண்ணுவேன். அப்பாகிட்ட கேட்டா பெல்டாயே அடிப்பாப்பலயே... இதுக்கு தான் பேசாமா ஹோண்ட ஷைன், ஸ்பிலண்டர் பிளஸ் மாதிரி பைக் வாங்கியிருக்கணும். மிஞ்சி, மிஞ்சி போனா அஞ்சு, பத்தாயிரத்துகுள்ள எல்லா செலவும் முடிஞ்சிருகும்.

ஸ்கூல் படிக்கிற காலத்துல.. அம்மா கூட மார்கெட் போயிட்டு வரும் போது பெரிய பைல்வான் மாதிரி அசால்ட்டா காய்கறிய கவர்ல வாங்கி தூக்கிட்டு வருவோம். சில சமயம் இப்படி தான் நடுவழியில கிழிஞ்சி போயிடும். "இதுக்கு தான் அப்பவே அந்த மஞ்சப்பைய தூக்கிட்டு பொண்ணு சொன்னேன்... கேட்டியான்னு " அரைமணிநேரம் அம்மாக்கிட்ட திட்டு வாங்குவோம்.

தட் பால் கேட்ச் மொமன்ட்... இதென்னமோ எதிர்பாராத நேரத்துல எடுத்த மாதிரி எல்லாம் தெரியலையே... அணில் கூட ஃபிரெண்ட்ஷிப் வெச்சு.. அதுக்கு கடலைய தூக்கிப் போட்டு பிராக்டிஸ் கொடுத்து.. க்ளோஸ்அப்ல கேமரா வெச்சு பல போட்டோ எடுத்து... அதுல ஒன்னு இப்படியாக சிக்கினது போல இருக்கே! அடேய்! மோசக்காரா... இதெல்லாம் ஆக்ஸிடென்ட்டா நடந்த மாதிரி தெரியல... இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட சதி! ஆனாலும், போட்டோ நைஸ்ங்க... இப்படி இதுக்கு முன்ன எங்கயாச்சும் போட்டோ பாத்திருக்கீங்களா?

ஜஸ்ட் மிஸ்.... அதாவது செல்ஃபீ எடுக்குற வேகத்துல்ல... அந்த பொண்ணு தன்னோட விரல கடிக்க வரத மறந்திடுச்சு... மத்தப்படி வேற எதுவும் இல்ல... நைஸ் வாத்து... கியூட் வாத்து!

குதிச்சிட்றா கைப்புள்ள... இந்த மனுஷ பக்கிங்க தனிய காலி பண்றத பார்த்தா... கேப்டவுன் கதி தான் இனி உலகம் முழுக்க போல... அதுக்குள்ளே ஆசை தீர குளிச்சுப்போம்... அப்பறம் நம்ம ஏரியாவுக்குள்ள வந்துட்டு... நான் என்னமோ அவங்க வூட்டுக்குள்ள புகுந்திட்ட மாதிரி வேற வியாக்கியானம் பேசுவாங்க!

போட்டோக்கார் மேல, அந்த பாட்டிக்கு அப்படி என்ன கோபமோ தெரியல... இப்படி அசலாடட்டா அந்த பய கனவுல தண்ணிய ஊத்திட்டியே பாட்டி!

நம்ம பசங்களுக்கு ஒரு கேட்ட பழக்கம் இருக்கு. நம்ம பய ஒரு பொண்ண எத்தன மணிநேரம் பார்த்தாலும் எதுவும் பண்ண மாட்டான். அதுவே, அவன் பாக்குற பொண்ணு அவன திரும்பி ஒரு செகண்ட் பார்த்துட்டா போதும்.. உடனே, அவன் இமேஜ டேமேஜ் பண்ணிடுவாங்க... பையன் வேற மொழுமொழுன்னு அழகா இருக்கான். இப்படி பந்த அடிச்சு பஞ்சர் பண்ணிட்டீங்களே பாஸ்!

ஐயோ.. அது நான் இல்லைங்க... ஒரு டப்பாவ ஆட்டையப் போட போயி... ஒட்டுமொத்தமா ஆட்டைய கலைச்சுட்டு வந்துட்டாங்க பசங்க. அப்படி என்னவா இருக்கும் அந்த டப்பா... ஒருவேளை பால் டப்பாவா இருக்குமோ...?

7990 total views