ட்ரஸ் கழட்டும் வரை விடமாட்டேன்… மனைவி நித்யாவுடனான பிரச்சனை குறித்து கோபத்தில் தாடி பாலாஜி..!

Report
1250Shares

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் காமெடி நடிகராகவும், பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருபவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே நடந்த குடும்ப சண்டை தமிழகம் முழுவதும் தெரியவந்தது. இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது.

மீண்டும் சந்தோசமாக போய்க்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் மீண்டும் ஒரு பூகம்பம் வந்துள்ளது.இது குறித்து பாலாஜி குறிப்பிடுகையில் மனைவி நித்யா உதவி ஆய்வாளர் மனோஜ் என்பவருடன் தகாத உறவில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நித்யா மனோஜை குறித்து கூறியுள்ளார். அதில் பாலாஜி தான் எனக்கு மனோஜை அறிமுகப்படுத்தினார்.மனோஜ் எங்கள் இருவருக்குமிடையே உள்ள பிரச்சனையை தீர்க்கமுயற்சி செய்தார். ஆனால் பாலாஜி எங்களுக்கு உதவ வந்த அவரை என்னுடன் இணைத்து தவறாக பேசி அசிங்கப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.

இதேவேளை மனோஜ் போஷிகாவை சாப்பிங் கூட்டிப் போவதாகவும் இதனால் விபரீதங்கள் ஏற்பட்டால் சட்டமும் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். குற்றம் செய்த மனோஜை இடமாற்றம் மட்டுமே செய்துள்ளனர்.. அவரது பொலீஸ் ட்ரெஸை கலட்டும் வரை ஓய மாட்டேன் என கூறியுள்ளார்..!

33796 total views