பிரபல தமிழ் நடிகை வடிவுக்கரசி வீட்டில் மர்ம நபர்கள் அரங்கேற்றிய செயல்.. அதிர்ச்சியில் பொலிசார்..!

Report
835Shares

ரிவி சீரியல்களில் தற்போது பிசியாக நடித்துவரும் பிரபல நடிகை வடிவுக்கரசி. சமீபத்தில் அவர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து மர்ம நபர்களால் 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.நகர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகை வடிவுக்கரசி. ’கன்னிப் பருவத்திலேயே’ படத்தில் அறிமுகமான அவர் ’முதல் மரியாதை’, ’அருணாசலம்’ உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ரிவி. தொடர்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது.

இவரது வீடு இருக்கும் அதே பகுதியில் தான் அவரது மகள் வீடும் உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வடிவுக்கரசி தனது மகள் வீட்டிலேயே தங்கிவிடுவது வழக்கம். கடந்த 10 நாட்களாக வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.

திருடர்கள் கைவரிசை

இந்நிலையில் அவர் வீடு திரும்பிய போது, அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 8 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இது குறித்து வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகன் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள்ளையர்கள் வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் அடிக்கடி தங்கும் தகவல் தெரிந்தவர்களாகவே இருக்கும் என்கிற கோணத்தில் போலிஸ் விசாரணை நடைபெற்றுவருகிறது.

29458 total views