மகனுடன் சண்டை போடும் விஜய் சேதுபதி... வைரலாகும் காணொளி!

Report
511Shares

நடிகர் விஜய் சேதுபதி தனது மகனுடன் சண்டைபோடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்கள் வரை நடித்து வருகிறார். இதனால் எல்லா நாளுமே அவருக்கு வேலை நாட்கள் தான். எனவே அவர் தனது குடும்பத்துடன் நேரம் கழிக்க விரும்பினால், அவர்களை படப்பிடிப்பு தளத்திற்கே அழைத்து சென்றுவிடுவார்.

ஜுங்கா படப்பிடிப்பின் போது கூட தனது குடும்பத்தை அவர் வெளிநாட்டுக்கே அழைத்து சென்றுவிட்டார். இதுபோல் தற்போது அவர் நடித்து வரும் சிந்துபாத் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மகனுடன் விஜய் சேதுபதி சண்டை போடுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் சூர்யாவின் கையை மடக்கி அடிப்பது போன்று விஜய் சேதுபதியும், அதேபோன்ற பாவனையை அவரது மகனும் செய்கின்றனர். ஸ்லோமோஷனில் இவர்கள் செய்யும் இந்த செயல் ரசிக்கும்படியாக இருக்கிறது. படக்குழுவினர் இந்த வீடியோவை தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அருண்குமார் இயக்கும் சிந்துபாத் படத்தில், விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவை அறிமுகம் செய்கிறார். படத்தின் டீசரில் ஒரு சில வினாடிகள், சூர்யாவின் காட்சிகள் இடம்பெற்றன. 9ம் வகுப்பு படித்து வரும் சூர்யா, குத்துச் சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

19617 total views