முதன் முறையாக குடும்ப பெண்களின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்.. குவிந்து வரும் லைக்குகள்..!

Report
3272Shares

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, தமிழில் வெளியான "ஜெயம்" படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இதுவரை பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அந்தவகையில் இவரது நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகி இன்றுவரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், நிமிர்ந்து நில், தனி ஓருவன் போன்ற தரமான படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், ஜெயம் ரவிக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. அவருடைய பெயர் ரோஜா மோகன். அதே போல அவரது அக்காவின் புகைப்படத்தை பல பேர் பார்த்திட வாய்ப்பும் இல்லை.

ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.

இந்நிலையில் தற்போது, ஜெயம் ரவி தனது குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டு, ஜெயம் குடும்பத்தின் பில்லர்ஸ் இவர்கள் தான் என பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் குடும்பத்தை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

103337 total views