திருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..!

Report
446Shares

தன்னைச் சுற்றி பின்னப்பட்ட காதல் கிசுகிசுக்களுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வலையில் தனது பெற்றோர் மூலம் மாப்பிள்ளை தேடிவருகிறார் நடிகை லட்சுமி மேனன். தனது திருமணம் மிக விரைவில் நடக்கவிருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்

பத்தாம் வகுப்பு பட்டித்துக்கொண்டிருக்கும்போதே ‘சுந்தரபாண்டியன்’ படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமான லட்சுமி மேனன் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு படங்கள் தொடங்கி அஜீத்தின் தங்கையாக வேதாளம் படம் வரை பிசியாக நடித்து வந்தார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த படம் றெக்க . அடுத்து அவருக்கு ஏனோ படங்கள் கமிட் ஆகவில்லை.

தற்போது மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு லட்சுமி மேனனின் கைவசம் இருக்கும் ஒரே படம் பிரபுதேவாவுடன் நடிக்கும் ‘யங் மங் சங்’ இப்படமும் வரும் ஆனா வராது நிலையில் இருப்பதால் நடிப்புக்கு முழுக்குப் போட்டு இல்லற வாழ்க்கையில் ஐக்கியமாக முடிவெடுத்திருக்கிறாராம் லட்சுமி மேனன்.

மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும்

96’ல் பிறந்து தற்போது 23 வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் லட்சுமி மேனனுக்கு அவரது பெற்றோர் தற்சமயம் மிகத் தீவிரமாக மாப்பிள்ளை தேடிவருகிறார்கள். ‘மொழி, ஜாதி, மதம் எதுவும் பிரச்சினையில்லை. மாப்பிள்ளை நல்லவராக, நேர்மையானவராக இருந்தால் போதும்’ என்பதுதான் லட்சுமி மேனனுக்கும் அவரது பெற்றோருக்கும் உள்ள ஒரே எதிர்பார்ப்பாம்.

17701 total views