விக்னேஷ் சிவன் வெளியிட்ட காணொளி... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Report
455Shares

கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மாலை ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத இயக்கத்தினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பிய காரை தற்கொலைப்படை வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதித் தாக்குதல் நடத்தினர். இதில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்புத் தொகையும் அரசு அறிவித்துள்ளது. அதே போல பல்வேறு பிரபலங்களும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியை அறிவித்துள்ளனர். நடிகர் ரோபோ சங்கர் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர் குடும்பங்களுக்கும் தலா 1 லட்சம் நிதியுதவி அறிவித்திருந்தார்.

இப்படி நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் 9 க்கு 6 இலக்கை சுட்டுள்ளேன். எனவே, ராணுவத்தில் சேரும் வழியென்ன என்று கேட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.


வெறும் பொழுதுபோக்கிற்கு துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டுவிட்டு ராணுவத்தில் சேர சவால் விட வேண்டாம் என்றும், ராணுவத்தில் சேரும் வழிமுறைகளை சொன்னால் ராணுவத்தில் சேர்ந்து விடுவீர்களா, சரியான லூசா இருப்பானோ என்றும் விக்னேஷ் சிவனை கழுவி ஊற்றி வருகின்றார்.

16423 total views