கள்ளகாதலியின் வீட்டிற்கு சென்ற காதலனின் மோகத்தினால் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!

Report
301Shares

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இருக்கும் நேதாஜி நகரை சார்ந்தவர் நளினி. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெங்களூரை சந்தவர் சிவகுமார். சிவகுமாருக்கும் நளினிக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவருக்கும் மூன்று வயதுடைய ரித்திகா என்ற குழந்தை இருக்கும் நிலையில்., கடந்த ஒன்றரை வருடமாக பெங்களூரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்., சென்னையை சார்ந்த முரளி என்பவருக்கும் நளினிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த பழக்கமானது சிவகுமாருக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அறிந்த சிவகுமார் தனது மனைவியை கண்டித்துள்ளார்., இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து ஒரு நாள் வழக்கம் போல தகராறு ஏற்பட்டதன் காரணமாக., தனது குழந்தையுடன் வாணியம்பாடிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில்., நேற்று நளினியின் கள்ளக்காதலன் முரளி வந்த நிலையில்., நளினி கடைக்கு சென்றுள்ளார். கடைக்கு சென்று இல்லத்திற்கு திரும்பிய சமயத்தில்., குழந்தை ரித்திகா தீக்காயத்துடன் உயிருக்கு போராடி துடித்தது.

இதனையடுத்து குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சமயத்தில்., வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

அந்த முதற்கட்ட விசாரணையில்., இவர்கள் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில்., கள்ளகாதலுக்கு குழந்தை இடையூறாக இருந்த காரணத்தால்., குழந்தை முரளியால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை அறிந்த காவல் துறையினர் முரளியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., மேலும்., குழந்தைக்கு பாலியல் ரீதியிலான தொல்லை ஏதேனும் அளித்து கொலை செய்தானா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

9945 total views