ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா?

Report
1102Shares

இந்தியாவில் 49 ராணுவ வீரர்கள் வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியாகிய சூழ்நிலையில், அது குறித்து சிறிதும் கவலையின்றி தனது ஹனிமூன் குறித்து ட்விட் போட்டிருந்த செளந்தர்யா ரஜினிகாந்துக்கு கண்டனங்கள் குவிந்ததைத் தொடர்ந்து நேற்று இரவு ராணுவ வீரர்களுக்கு தனது இரங்கலைத் தெரித்திருக்கிறார்.

கடந்த நான்கு தினங்களுக்கு தனது தேனிலவுக்காக கணவர் விசாகனுடன் ஐலந்து தீவுக்குச் சென்றார் செளந்தர்யா. அங்கிருந்தபடியே தனது உற்சாகத்தை மக்களிடம் பகிர்ந்துகொள்வதற்காக ‘அடிக்குது குளிரு’...ஹனிமூன் சந்தோஷம்....உற்சாகம்...மிஸ் யூ வேத்’ என்று குட்டி குட்டியாய் ட்விட் போட்டிருந்தார்.

இந்த ட்விட்டுக்கு ஓரிருவர் வாழ்த்துகள் போட்டிருந்தாலும் பெரும்பாலானோர் மிகவும் கொச்சையான வார்த்தைகளில் அவர்கள் இருவரையும் திட்டி பதில் கமெண்ட் போட்டனர். ‘இங்கே 40 ராணுவ வீரர்கள் பலியாகி நாடே சோகத்துல மிதக்கிறப்ப, உங்களுக்கு ஹனிமூன் கேக்குதா? என்ற பொருள்படவே பெரும்பாலான கமெண்டுகள் இருக்கின்றன.

அந்த கமெண்டுகளைக் கண்டு தனது ஹனிமூன் பதிவை செளந்தர்யா நீக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை டெலிட் செய்யாத அவர் நேற்று இரவு தனது ட்விட்டரில் தேசியக்கொடியில் வீரர்களின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகளின் படங்களை டேக் செய்து ...#RIPOurBraveSoldiers #HeartBroken'...என்று பதிவிட்டிருக்கிறார்.

47035 total views