ஆல்யா-சஞ்சீவ் ஜோடிக்கு விரைவில் திருமணம்! எப்போ தெரியுமா?

Report
419Shares

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த இந்த மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பிரபலமாக ஆகிவிட்டார்.

சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பாக நடிகை மானஸா, மானஸ் என்ற நடன இயக்குனரை காதலித்து வந்தார். அதன்பின்பு அவரை பிரிந்துவிட்டார்.

அதே போல நடிகை மானஸாவும் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவை காதலிக்க துவங்கினர். இவர்கள் இருவரும் காதலை தெரிவித்த பின்னர் இவரது ரசிகர்களுக்கு காதலை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வாரகள் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் சஞ்சீவ் மற்றும் ஆல்யாவிற்கு சின்னத்திரையில் பிரபலமான ஜோடிகள் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விழாவின் போது விருது குறித்து கேள்விக்கு பதிலளித்த ஆலியா, இப்போதைக்கு கல்யாணம் செய்யும் முடிவில் இல்லை. நடிப்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். அதன் பிறகு திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

15835 total views