சூப்பர்ஸ்டாராக இல்லாமல் சவுந்தர்யாவின் தந்தையாக இருந்த ரஜினி... கொடுத்த சீர்வரிசை எவ்வளவு தெரியுமா?...

Report
2933Shares

ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவின் மறுமணம் நேற்று கோலாகலமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதை ஒட்டி ரஜினிக்கு சமூகத்தின் பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபரான அஸ்வின் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்வின் சௌந்தர்யா தம்பதியினர் சட்டப்படி விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர். குழந்தை சௌந்தர்யாவிடம் வளர்கிறது. இந்நிலையில் இப்போது சௌந்தர்யாவிற்கும் விசாகன் என்பவருக்கும் கோலாகலமாக மறுமணத்தை நடத்தி வைத்துள்ளார் ரஜினி.

விவாகரத்துப் பெற்ற ஒருவர் தனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வது அவரது சொந்த உரிமை. குழந்தை இருக்கிறது, சமூகம் என்ன சொல்லுமோ என அஞ்சாமல் சௌந்தர்யா எடுத்த துணிச்சலான முடிவுக்கு முழு ஆதரவு தந்து ரஜினி செயல்பட்டுள்ளதாக பாராட்டுகள் எழுகின்றன. படத்தில் இவ்வாறான செயல்பாட்டிற்கு எதிராக இருந்தவர் தனது சொந்த மகளின் வாழ்க்கையில் ஒரு சிறந்த அப்பாவாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினி தனது மகள் சவுந்தர்யா, மருமகன் விசாகனுக்கு திருமண சீர்வரிசையாக 500 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

105720 total views