காதலியை கரம் பிடித்தார் பிரபல தொகுப்பாளர்.. நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டதற்கான காரணமும் இதுதான்..!

Report
688Shares

ஆர்ஜேவாக மீடியா உலகிற்கு என்ட்ரி கொடுத்த விஜய் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

வாழ்வில் தான் கண்ட இலட்சியத்தை ஓரளவிற்கு நிலைநாட்டிய விஜய் தற்போது வாழ்வின் மிகமுக்கிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளார். ஆம், இரண்டு வருடமாக காதலித்து வந்த மிர்ச்சி மோனிகா என்கிற பெண்ணை கரம் பிடித்தார் விஜய் .

நண்பர்களாக அறிமுகமான மோனிகா, விஜய் பின்னாளில் காதலர்களாக வலம் வர தற்போது இருவீட்டாரின் ஆசியோடு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணம் பிப்ரவரி 10 ஆம் தேதியே நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா, சினேகா, ரியோ, பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட் ராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிவகார்த்திகேயன் இருக்கும் இவர்களின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் நேற்று நடந்த ரஜினி மகள் சௌந்தர்யாவின் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. அழைப்பு விடுக்காதததால் சூப்பர் ஸ்டார் வீட்டு கல்யாணத்தில் பங்கேற்காதவர் தனது நண்பர் விஜய் திருமணத்தில் பங்கேற்று ஆட்டம் போட்டுள்ளார்.

25888 total views