ஆரவாரமாக நடைப்பெற்று வரும் சவுந்தர்யா திருமணம்.. யாரெல்லாம் வந்திருக்காங்கணு பாருங்க புகைப்படம் வீடியோ கண்ணோட்டம்..!

Report
1550Shares

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணக் கொண்டாட்டங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரஜினி வீட்டில் தொடங்கி விட்டது.

மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல் உட்பட பல முக்கிய பிரபலங்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை வைத்து ரஜினி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸில் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நடைபெற்றது. ரஜினியின் மிக முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொள்கின்றனர்.

அந்தவகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தங்கமணி ஆகியோர் அவருடன் சென்றிருந்தனர். இதேபோல், நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த விழாவில் பங்கெடுத்துள்ளனர். திருமணம் முடிந்ததும், அதே லீலா பேலஸில் பகல் 11 மணி முதல் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் திருமண விழாவில் கலந்து கொண்டவர்களின் புகைப்பட கண்ணோட்டத்தை பாருங்கள்....

61392 total views