சவுந்தர்யா வாழ்வில் முக்கியமான மூன்று ஆண்கள்... யார் யார்னு தெரியுமா?

Report
580Shares

தனது வாழ்வின் மிக முக்கியமான மூன்று ஆண்கள் யார் என்பது குறித்து ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் பிப்ரவரி 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக சொந்தபந்தங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலருக்கு நடிகர் ரஜினி அழைப்பிதம் கொடுத்து வருகிறார்.

இன்று காலை கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார். மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை அமைவதில் ஒரு தந்தையாக மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து சவுந்தர்யா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் "வார்த்தைகளை கடந்து நான் ஆசிர்வதிக்கப்பபட்டிருக்கிறேன். என் வாழ்வின் மிக முக்கியமான மூன்று ஆண்கள். எனது டார்லிங் தந்தை. எனது தேவதை மகன். தற்போது என்னுடைய விசாகன்", என அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் தனது திருமணம் குறித்து சவுந்தர்யா எந்த அளவுக்கு ஆசையாக இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

20916 total views