மகள் சவுந்தர்யா திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய ரஜினி.. தீயாய் பரவி வரும் காட்சி..!

Report
999Shares

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நாளை (பிப்.11) திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தற்போது வரை சிறப்பாக நடக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் DJ நடந்துள்ளது. அப்போது 24 ஆண்டுகளுக்கு முன் வெளியான 'முத்து' படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு ரஜினிகாந்த் குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதில் லதா ரஜினிகாந்தும் டான்ஸ் ஆடியுள்ளார். இதனை ஒருவர் படம் பிடித்து ட்விட்டரில் வெளியிட இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

32805 total views