பிக்பாஸ் பிரபலம் சென்றாயனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. வாழ்த்து மழையில் சென்றாயன் குடும்பத்தினர்கள்..!

Report
1216Shares

பிக்பாஸ் 2ல் பிரபலமான நடிகர் சென்றாயனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சென்றாயன். தொடர்ந்து 'சிலம்பாட்டம்', 'ஆடுகளம்', 'மூடர்கூடம் எனப் பல படங்களில் நடித்திருந்தார். 'ஜீவா'வின் 'ரௌத்ரம்' படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்த சென்றாயனுக்கு, மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர், தனது வெகுளித்தனமான பேச்சால் மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும் தனக்கு குழந்தை இல்லை என்பதை கமல் மற்றும் மற்ற போட்டியாளர்களிடம் சொல்லி மிகவும் வேதனைப் பட்டார் சென்றாயன்.

ஆனால் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அப்போது அவரது காதல் மனைவி கயல்விழி கர்ப்பமாக இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அப்போது அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை பிக் பாஸ் ரசிகர்கள் யாரும் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்நிகழ்ச்சியின் இறுதியில் கயல்விழிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் விஜய் டிவியில் நடத்தப்பட்டது. இந்நிலையில் சென்றாயன் - கயல்விழி தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

37309 total views