ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழன் படம்…மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Report
674Shares

தமிழர் நடித்துள்ள ஒரு குறும்படம் ஆஸ்கர் பரிந்துரையில் இருப்பது தமிழருக்கு பெருமையை தேடிதந்துள்ளது.

2019ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த இந்திய படமும் ஆஸ்கர் விருதை பெறவில்லை. எனவே, இது சினிமா ரசிகர்களுக்கு ஏக்கமாகவே இருந்தது.

இந்நிலையில்தான், மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பற்றி ஈரானிய – அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி எடுத்துள்ள ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டென்ஸ்’ என்கிற டாக்குமெண்டரி ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த டாக்குமெண்டரி வீடியோ 26 நிமிடங்கள் ஓடுகிறது.

விலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் இந்த பீரியட் டாக்குமெண்டரியில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தில்தான் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமர ‘பேட் மேன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.

எனவே, ஒரு தமிழர் நடித்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது பெருமையை தேடி தந்துள்ளது.

21087 total views