கைது செய்யப்படுவாரா தல அஜித்?...கொந்தளிப்பில் ரசிகர்கள்!

Report
953Shares

அஜித் கட் அவுட் சரிந்து ரசிகர்களின் காயமடைந்த விவகாரம், அஜித் படம் பார்க்க பணம் கொடுக்காத தந்தையை எரித்த சம்பவம், தியேட்டரில் கத்தி குத்து சம்பவங்களை கண்டிக்காத அஜித் மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

கடந்த ஜனவரி 10ம் தேதி அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட படங்கள் வெளியாகி வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றன. இரண்டு முன்னனி நடிகர்களின் படங்கள் வெளியாகி இரண்டும் வெற்றி பெற்று அசத்தி வருகின்றன.

அது ஒருபுறம் இருந்தாலும் இதில் எந்த படம் சிறப்பான வசூலை பதிவு செய்திருக்கின்றன என விவாதம் செய்து வருகின்றன சில தனியார் செய்தி தொலைக்காட்சிகள்.

இந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு என்பவர் பேசும் போது, “தற்போது வெளியாகும் முக்கிய நடிகர்கள் நடித்த படங்களில், எந்த படம் வெற்றி பெற்றுள்ளது என்பது தொடர்பாக, அரசு உட்பட பலரால் கட்டமைக்கப்பட்டுகின்றன.

அண்மையில் வெளியான விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை மகன் எரித்த சம்பவம், அஜித் கட் அவுட் சரிந்து விபத்து, தியேட்டரில் இருக்கை கிடைப்பதில் பிரச்னையால் கத்தி குத்து என அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இது போன்று ரசிகர்களின் தவறான செய்கைகளுக்கு அஜித் மட்டுமல்ல, ரசிகர்களை கட்டுப்படுத்த ரஜினி கூட கருத்து தெரிவிக்கலாம். இதை எல்லாம் தட்டிக் கேட்காத அஜித் மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டும்.” என பேசியுள்ளார்.

26034 total views