என்னை பணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா?... விளாசும் நெட்டிசன்களுக்கு அனிஷாவின் பதில்!

Report
1230Shares

விஷால் பணத்திற்காக தன்னை திருமணம் செய்வதாக கூறிய நெட்டிசனை விளாசியுள்ளார் அனிஷா ரெட்டி.

நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அனிஷாவை தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று விஷாலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனிஷா தான் விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

பணத்தை வைத்து யாரை வேண்டுமானாலும் வாங்கலாம். உங்களை நினைத்தால் வெட்கமாக உள்ளது என்று நெட்டிசன் ஒருவர் அனிஷாவை விளாசினார்.

தன்னை விளாசிய நபரை பார்த்து கோபப்படாமல் பொறுமையாக பதில் அளித்துள்ளார் அனிஷா. பணத்திற்காக விஷால் தன்னை காதலிக்கவில்லை என்கிறார் அனிஷா.

சாரி, உங்கள் பணம் இல்ல அப்பாவின் பணம். இல்லை என்றால் ஆட்டு மூஞ்சி போன்று இருக்கும் உங்களை எல்லாம் யார் காதலிப்பார்கள்...அவர் தன் முடிவை பரிசீலிக்க வேண்டும்... வரலட்சுமி எவ்வளவோ நன்றாக இருக்கிறார் என்று அந்த நெட்டிசன் மீண்டும் கமெண்ட் போட்டுள்ளார்.

அனிஷா பதில் அளித்ததை பார்த்த சிலர் ஃப்ரீயா விடுங்க, இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டாம். அவர்களுக்கு இதே வேலையாகிவிட்டது என்று தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் அனிஷாவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது.

38877 total views