போதையில் மயங்கிய தாய்.. கதறி அழுத குழந்தை: கண் கலங்க வைக்கும் வீடியோ!

Report
747Shares

அமெரிக்காவில் அதிகமாக போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் கடை ஒன்றில் போதையில் மயங்கி விழுந்த பெண் ஒருவரை, அவரின் 2 வயது குழந்தை அழுது கொண்டே எழுப்பும் காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் லாரன்ஸ் என்ற பகுதியில் பேமிலி டாலர் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது.

இங்கு 36 வயதான பெண் ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் வந்து தேவையான பொருட்களை வாங்கியுள்ளார்.

போதை பொருள் எடுத்து இருந்ததால், அப்பொழுது அந்த பெண் எதிர்பாரதவிதமாக மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரின் 2 வயது குழந்தை அந்த பெண்ணை எழுப்பும் காட்சி கண்களை குளமாக்குகிறது. நீண்ட நேரமாக தனது தாயை அந்த குழந்தை அழுது கொண்டே எழுப்ப போராடுகிறது.

தாயின் கன்னத்தில் அடித்தும், நெஞ்சில் எழுப்பியும் அந்த பெண் எழுந்தபாடில்லை. இதனையடுத்து குழந்தையின் அழுகையை கேட்டு அங்கு வந்த கடை ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.

மயக்க நிலையில் இருந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

20719 total views