பழைய மொபைல் போனில் இருந்து தங்கம் எடுக்கத் தெரியுமா...?

Report
252Shares

ஸ்மார்ட்போன் வாங்குவதும், தங்கம் வாங்குவதும் ஒன்னு தான் போல. ஆய்வாளர்களின் புதிய வழிமுறை தான் இதை யோசிக்கச் செய்தது என்றே கூற வேண்டும். பழைய கருவிகளில் இருந்து தங்கம் எடுக்கும் இன்றைய வழிமுறைகள் உடல் நலனிற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது.

சைனைடு போன்ற நச்சு அடங்கிய இரசாயனம் இருப்பதால் பழைய கருவிகளில் இருந்து தங்கம் எடுப்பது சற்றே ஆபத்தான காரியம் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பழைய மொபைல் போன், தொலைக்காட்சி பெட்டி மற்றும் கணினிகளில் உலகின் ஏழு சதவீத தங்கம் மறைந்திருப்பது தெரியவந்திருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து நச்சு இரசாயனங்களினால் பாதிப்பு ஏற்படாத வகையில் பழைய கருவிகளில் இருக்கும் தங்கத்தை எடுக்க புதிய வழிமுறை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். 'புதிய வழிமுறையின் மூலம் தேவையற்ற கருவிகளில் இருந்து விலை மதிப்புடைய தாதுகளை எடுப்பது வணிக ரீதியில் பல்வேறு நன்மைகளை வழங்கும்' என முதன்மை ஆய்வாளர் ஜாசன் லவ் தெரிவித்துள்ளார்.

அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகளில் இருந்து தங்கத்தை எடுக்கும் வழிமுறையில் பல்வேறு வேதியியல் மற்றும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் நச்சு குறைந்த ஆசிடில் போர்டுகள் வைக்கப்படுகின்றன. இவ்வாறு செய்த பின் இந்த ஆய்வு குழுவினர் கண்டறிந்த வேதியியல் இரசாயனம் சேர்க்கப்படுகின்றது. உடனே சர்க்யூட் போர்டில் இருக்கும் தங்கம் தனியாக வெளியேறி விடுகின்றது.

ஜர்னல் ஆஃப் ஆங்வேண்ட் கெமியில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு பழைய மின் கருவிகளில் இருந்து தங்கத்தை எடுக்கப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7201 total views