ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம்.. வேண்டுகோள் வைத்த ரசிகர்கள்!

Report
99Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். இந்த ஓராண்டில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாக ரஜினி தரப்பில் கூறி வந்தாலும் இன்னும் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ரஜினி நடித்த இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. 'காலா' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களிலும் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் இல்லை.

குறிப்பாக மாஸ் ஒப்பனிங், மாஸ் ஒப்பனிங் பாடல் இந்த இரண்டும் இரண்டு படங்களிலும் இல்லாதது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இந்த நிலையில் இன்று வெளியான 'பேட்ட' படத்தின் டீசர் ரஜினி ரசிகர்களுக்கு முழு திருப்தியை கொடுத்துள்ளது. மேலும் 'சிவாஜி' படத்திற்கு முன் வெளிவந்த ரஜினி படங்கள் போல் இந்த படத்தில் மாஸ் ஓப்பனிங் காட்சி இருப்பதாகவும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில் 'தலைவா' நீங்க அரசியலுக்கு வரவேண்டாம், 'பேட்ட' மாதிரி இன்னும் நிறைய மாஸ் படங்களில் நடிக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த திடீர் பல்டி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

4241 total views