குட்டியை இழந்த கழுதைக்குள் இப்படியொரு திறமையா?... சோகத்தில் நிகழ்ந்த சந்தோஷம்

Report
201Shares

சிலர் பாடுவதை பார்த்து கிண்டல் அடிப்பதற்காக நாம் சில சம்யங்களில் என் கழுதை போல கத்துகிறாய் என கேட்போம். ஆனால் உண்மையாக கழுதை கத்துவதை பார்த்ததுண்டா? இந்த காணொளியில் பாருங்கள்

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரெஸ்க்யூ சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற தன்னார்வல தொண்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டது. அதில் கழுதை ஒன்று அழகான ரிதத்தில் பாடியுள்ளது.

இந்த கழுதை குறித்து நம் செய்தி நிறுவனத்திற்கு ரெஸ்க்யூ டிரஸ்ட் நிறுவனம் அளித்த தகவலில் கூறுவதாவது : "புனேவில் உள்ள ஒரு வீதியில் இந்த கழுதை கர்ப்பத்துடன் திரிந்துள்ளது. அப்பொழுது ஒரு நாள் இதற்கு குட்டி பிறந்த போது அது இறந்து பிறந்துள்ளது. அப்பொழுது முதல் இந்த கழுதை அருகில் யாரையும் விடாமல் ஆக்ரோஷமாக இருந்துள்ளது. இது குறித்து ரெஸ்க்யூ டிரஸ்டிற்கு தகவல் வந்ததும் நாங்கள் அந்த இடத்திற்கு சென்று இந்த கழுதையை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்தோம். அன்று முதல் அந்த கழுதையை நாங்களே பராமரித்து வந்தோம். என கூறியுள்ளனர்.

மேலும் அந்த கழுதை பாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

8404 total views