பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த அடிதடி சண்டை.. தற்போது வெளியான வீடியோ ஆதாரம்..

Report
583Shares

தமிழில் இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் அதிகபட்சமாக ஹிந்தியில் தான் 12 சீசனை எட்டியுள்ளது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் 12வது சீசனை கடந்த செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி துவங்கியது.

இந்நிலையில், இந்த சீசனில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் ஐ பி எல் சூதாட்டத்தால் கிரிக்கெட் விளையாட தடை பெற்றார்.

மேலும், இவர் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் வீரர் என்ற பெயரெடுத்தவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கூட சக போட்டியாளர்களிடம் மிகவும் ஆக்ரோஷமாகவே இருந்து வருகிறார் ஸ்ரீசாந்த.

ஸ்ரீசாந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்த ரோஹித் சுசந்தி என்பவரை ஓரின சேர்க்கையாளர் என்று விமரசித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ஒன்றில் கேப்டன்சி டாஸ்கின் போது ஸ்ரீசாந்துக்கும் சக போட்டியாளரான ரோஹித் சுசாந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ரோஹித் ஸ்ரீசாந்தை பார்த்து பிச்சைக்காரன் என்று கூற அவருக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்துவிட்டது. உடனே ரோஹித்தை கன்னத்தில் அறைந்துவிட்டார்.

View this post on Instagram

Tommorow's Promo

A post shared by Bigg Boss 12 💙 (@biggboss_khabri) on

22396 total views