மரத்தை அழிக்க விடாமல் சண்டை போட்ட குரங்கு: கண்ணீரை வரவழைக்கும் சம்பவம்!

Report
439Shares

தான் தங்கி இருந்த மரத்தை அழிக்க வேண்டாம் என ஓரங்குட்டான் குரங்கு ஒன்று சண்டை போட்டுள்ளது.

இந்தோனேசியாவின் Borneo பகுதியில் உள்ள Sungai Putri காட்டில் உள்ள மரங்களை புல்ட்ரோசர் மூலமாக அழித்து வரும்போது அந்த மரத்தில் இருந்த ஓரங்குட்டான் குரங்கு ஒன்று புல்ட்ரோசரனை பிடித்து மரத்தை அழிக்க வேண்டாமென்று செய்கை காட்டியுள்ளது.

பின்பு ஓரங்குட்டான் குரங்கு கீழே சென்றதும் மீண்டும் மரத்தை உடைப்பதற்கு புல்ட்ரோசர் வைத்து முயற்சி செய்துள்ளனர். அப்போது, மீண்டும் குரங்கு மேலே வந்து தடுத்தது.

கடந்த 2013 ஆம் நடந்த இச்சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோவை சர்வதேச விலங்கு நல அமைப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவானது மனிதர்களுக்கும் நல்லதொரு பாடத்தை புகட்டியுள்ளது.

இதேவேளை காட்டில் இருந்த மரங்கள் ஏன் அழிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

14264 total views