அடுக்கு மாடியில் உயிருக்கு போராடிய நாய்! உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வாலிபரின் திக் திக் நிமிடங்கள்

Report
212Shares

அடுக்குமாடி ஜன்னல் வளியாக தொங்கியபடி இருந்த நாயை, மீட்ட வாலிபரின் திக் திக் காட்சி பலரையும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாய் ஒன்று மாடியின் ஜன்னல் கதவின் வழியாக வெளியே வர தொங்கிபடி முயற்சித்துள்ளது. இதனை கண்ட வாலிபர் ஒருவர் அதை மீட்க பல வழிகளில் முயற்ச்சி செய்துள்ளார். ஆனாலும் அவரால் தன் இடத்தில் இருந்து நாயை மீட்க முடியவில்லை.

இதனால் ஆபத்தில் இருந்த நாயை மீட்க தன் உயிரையும் பணயம் வைத்து மாடியின் ஜன்னல் வழியாக ஏறியுள்ளார். நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு நாயை பத்திரமாக மீட்டு அனைவரின் அச்சத்தையும் போக்கினார் அந்த வாலிபர்.

மேலும் நாய் எதனால் இப்படி வெளியே வந்தது என்று ஆராய்ந்துள்ளனர். நாயின் உரிமையாளர்கள் நாயை உள்ளேயே வைத்து வீட்டை பூட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் வெளியே வர வழியில்லாமல் திறந்த பால்கனியின் ஜன்னல் வழியாக வந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

உயிரை பணயம் வைத்து நாயை மீட்ட அந்த வாலிபருக்கு பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

loading...