ரஜினியின் பிரமாண்ட படமான 2.O - விற்கு நாள் குறித்த தமிழ் ராக்கர்ஸ்..!

Report
332Shares

விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான சர்கார் படத்திற்கு எப்படி நாள் குறித்து சொன்னபடி சொன்ன நேரத்தில் எச். டி பிரிண்டை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டார்களோ, அதே போன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து வெளிவர உள்ள 2.0 படமும் அதே எச்.டி ப்ரிண்டோடு விரைவில் வெளியிடப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்து உள்ளனர் தமிழ் ராக்கராஸ்.

இப்போது தான் சர்கார் பட விவகாரம் தொடர்பாக பெரும் சர்ச்சைக்கு பின், சர்ச்சை காட்சிகளை நீக்கி கொஞ்சம் அமைதி நிலவ தொடங்கியது.அதற்குள் தமிழ் ராக்கர்ஸ் ரூம் போட்டு யோசிப்பார்களோ என்னமோ தெரியவில்லை…சினிமா என்று வந்து விட்டால் எப்போதும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

டேய் யாருடா நீங்க என பலரும் ரூம் போட்டு புலம்பும் அளவிற்கு. நீங்க எங்க இருக்கீங்க….எப்படி டா பிரிண்ட் எடுக்குறீங்க. உங்கள மட்டும் கண்டுப்பிடிக்கவே முடியலையே. மகனே நீ மட்டும் கையில கிடைத்த.அவ்ளோ தான் என பட குழுவினர் டென்ஷன் ஆகும் அளவிற்கு உள்ளது தமிழ் ராக்கர்ஸ் பதிவுகள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எப்போதும் சர்ச்சை நிறைந்த மாநிலமாக மாறி வருகிறது தமிழ்நாடு என பொது மக்களே புலம்பும் அளவிற்கு சென்றுவிட்டது இன்றைய நாட்டு நடப்பு.

இதற்கிடையில், சர்காரை அடுத்து அடுத்த சரவெடி நியூஸ் தயாராகி விட்டது என்றே கூறலாம்…

12240 total views