யார் இந்த கோமளவள்ளி..? உண்மையில் ஜெயலலிதா தானா..! கூகுளை திணற வைத்த நெட்டிசன்கள்

Report
1386Shares

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி நடிகர் விஜய் மற்றும் நடிகை வரலட்சுமி நடித்து தீபாவளி தினத்தன்று வெளியான படம் தான் சர்கார்.

இந்த படம் வெளியானதிலிருந்தே பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி வருகின்றனர் ஆளும் கட்சியினர்.

படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று திரயரங்குகளில் கட்டப்பட்டிருந்த பேனரை கிழித்தும், போரட்டம் நடத்தியும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கதாப்பாத்திரத்தின் பெயர் கோமலவள்ளி என குறிப்பிடப்பட்டிருந்தது.

மிகவும் துணிச்சலாக பெண் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமியின் ரோல், ஜெயலலிதாவை பிரதிபலிப்பதாக சர்ச்சைக்கள் வெடித்தன.

மேலும், படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயரான கோமளவள்ளி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ற தகவல்களும் கசிந்தன. ஆனால் இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. அதே நேரத்தில் கோமளவள்ளி என்ற பெயர் ஜெயலலிதாவின் பெயரே இல்லை என்று அமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுஒருபுறம் இருக்க, நாங்கள் கூகுளையே கேட்டுக் கொள்கிறோம் என்று படையெடுத்து சென்ற நெட்டிசன்கள் கூகுளே திணற திணற கோமளவள்ளி யார்? ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ன? கோமளவள்ளியின் அர்த்தம் என்ன? போன்ற பல கேள்விகளை தேடியுள்ளனர்.

அதேபோல் 49P குறித்து சர்கார் ரிலீசுக்கு பின்னர் பெரும்பாலானோர் தேடியுள்ளனர். இதன் காரணமாக கூகுள் ட்ரெண்டிங்கில் கோமளவள்ளி தொடர்ந்து தேடுதளில் இருந்து வருகிறது.

60566 total views