சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி... தற்போது அதன் நிலையை நீங்களே பாருங்க!

Report
1807Shares

ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணியில் வெளிவந்த படமான சர்கார் பல பிரச்சினைகளைக் கடந்து வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சிகளைப் பற்றிய வசனங்கள் இதில் அதிகமாக இருப்பதால் பிரச்சினை பூதாகரமாக வெடித்து வந்தன.

இப்படத்தில் இலவசமாக கொடுக்கப்பட்ட மிக்ஸி, பேன் இவற்றினை முருகதாஸ் தீயில் போட்டு எரிப்பதாக காட்சி வெளியானது. பிரச்சினைக்கு முதல் காரணமே இக்காட்சி தானாம்...

தற்போது சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் பணி முடிவடைந்து, இப்போது மறு சென்சார் செய்யப்பட்ட காட்சிகளுடன் படம் காட்டப்படுகிறது.

அதிமுகவினரின் ஆவேச போராட்டங்களால், சர்ச்சை காட்சிகளை நீக்குவதாகவும், கோமளவள்ளி என்ற பெயர் வரும் இடத்தில் ம்யூட் செய்வதாகவும், பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இதையடுத்து இன்று காலை 11.30 மணிக்கு மறு தணிக்கை பணிகள் துவங்கியது. சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த பணி முடிந்தன. இன்று மேட்னி ஷோ முதல், மறு தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. சில தியேட்டர்களில் மாலை முதல் மறு தணிக்கை செய்யப்பட்ட படம் காட்டப்படும்.

எந்தெந்த காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து, இப்போது விவரம் வெளியாகியுள்ளது. இலவச பொருட்களை தீயிட்டு எரிக்கும் 5 நொடி காட்சிகள் நீக்கம். கோமளவல்லியில், 'கோமள' என்ற சொல் ம்யூட் செய்யப்படும். கொசு உற்பத்திக்குக் காரணமான பொதுப்பணித்துறை என்ற வரியில், பொதுப்பணித்துறை ம்யூட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது முருகதாஸ் இலவச பொருட்களை எரித்த காட்சியினை நெட்டிசன்கள் டப்ஸ்மேஷாக மாற்றி இணையத்தில் கசிய விட்டுள்ளது. இக்காட்சி இதோ உங்களுக்காக...

67141 total views