காலியாக காட்சியளிக்கும் தியேட்டர்.. இணையத்தில் சர்கார் வெளியானதால் ஏற்பட்ட தாக்கமா?

Report
1341Shares

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் காலை முதல்காட்சியில் இருந்து படத்தை பார்த்துவிட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியான 6 மணிநேரத்திற்குள் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது.

இன்று வெளியான படம் இணையத்தில் வெளியானதால் சர்கார் படம் வெளியிடும் திரையரங்கில் இருக்கைகள் அதிகமான அளவில் காலியாக உள்ளதாக காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த காணொளி உண்மையிலேயே சர்கார் படம் வெளியிடும் தியேட்டர் தானா என்பதில் சந்தேகமும் எழுந்துள்ளது. சர்கார் படத்தின் டிரைலர் வெளியிட்ட போது தியேட்டரின் காட்சியினை தற்போது வெளியிட்டு மேலும் பரபரப்பினை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

49192 total views