அவர் என்னிடமும் அப்படித்தான் நடந்துகொண்டார்: சிந்துஜா அதிரடி..! வைரமுத்து மீது பாய்ந்த அடுத்த பாலியல் குற்றச்சாட்டு!

Report
1484Shares

ள பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக இசைக் கலைஞர் சிந்துஜா ராஜாராம் குற்றச்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் எல்லா துறைகளிலும் தொடர்ந்து வருகிறது. மீ டூ என்ற கேஸ்டாக் மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து பெண்கள் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

இதையடுத்து திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் என அடுக்கடுக்காக சர்ச்சையில் சிக்கி வருகின்றர். பிரபல பாடலாசிரியர் வைரமுத்து பாலியல் தொந்தரவு செய்தார் என பாடகி சின்மயி குற்றம் சாட்டினார்.

இது தமிழ் திரையுலகம் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்தாக, மற்றொரு இசைகலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் சுதந்திர இசைக்கலைஞர் சிந்துஜா ராஜாராம், 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து தனது ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில்,

எனக்கு 18 வயது இருக்கும். நான் காஸ்மிக் ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தேன். எனது தந்தை பெங்களூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அதனால் சென்னையில் உள்ள விடுதியை தேடி வந்தேன்.

அப்போது வைரமுத்துவின் விடுதி குறித்து அறிந்தேன். அவரும் இந்த துறையில் இருப்பதால் இரவு நேரத்தில் பணி இருக்கும் என்பதை புரிந்துக்கொள்வார் என்று என் அம்மா நினைத்தார்.

இதுகுறித்து வைரமுத்துவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். என்னையும் எனது பெற்றோரையும் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். சில தினங்கள் கழித்து கோடாம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம்.

நான் இசையமைத்த சில பாடல்களை சிடி-யாக அவரிடம் கொடுத்தேன். அவருக்கு அது பிடித்திருந்ததாகவும், ஒரு நாள் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சந்திக்க வாய்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் தெலைபேசி வழியாக என்னை தொடர்பு கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு சிறிய வேலை இருப்பதால் என்னையும் அழைத்தார். எனக்கு தயக்கமாக இருந்ததால் வேறு ஒரு நபரையும் என்னுடன் அழைத்துச் சென்றேன்.

அடுத்த நாள் மீண்டும் போன் செய்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்னுடைய வேலைகள் பிடித்திருந்ததாக வைரமுத்து கூறினார். பின்பு அடிக்கடி போன் செய்வார். எப்போதாவது சந்திக்கலாம் என்று சொல்வார். நானும் கண்டிப்பாக என்று கூறி போனை வைத்துவிடுவேன்.

அவர் என்னை தொடர்புகொள்ளும் போதெல்லாம் ஏதேனும் காரணங்கள் கூறி தப்பித்து விடுவேன். ஒரு நாள் என்னை மிகவும் மிஸ் செய்வதாகவும், என்னை குறித்து கவிதைகள் எழுதியுள்ளதாகவும், அதை காண அவருடைய பெசன்ட் நகர் அலுவலகத்தில் சந்திக்குமாறு கூறினார். மற்றொரு நாள் அவர் என்னை நேசிப்பதாக தெரிவித்தார்.

அவர் பேசியது எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. இனிமேல் அப்படி பேசாதீர்கள் என்று கூறினேன். தனியார் தொலைகாட்சியில் பணிபுரிந்த மற்றொரு பெண் ஊழியரிடமும் இதேபோன்று நடந்துக் கொண்டதாக கேள்விபட்டேன். அன்றிலிருந்து அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன்.

எல்லோரும் சின்மியிக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். அவர் பொய் பேசுவதாகவும் தெரிவிக்கிறார்கள். அதனால், நமக்கு நடந்ததை ஏன் கூறக்கூடாது என்று நினைத்து வெளியுலகிற்கு சொல்ல முன்வந்தேன், என்றார் சிந்துஜா.

சின்மயி தொடர்ந்து வைரமுத்து மீது சிந்துஜா ராஜாராம் பாலியல் புகார் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44682 total views