விமானத்தில் அணிலுடன் பயணம் செய்தது தப்பா?... மூதாட்டியை அலேக்காக தூக்கி வெளியேற்றிய பொலிசார்...!

Report
73Shares

மூதாட்டி ஒருவர் அணிலுடன் விமானத்தில் பயணம் செய்ய அடம்பிடித்ததால் அவரை பொலிசார் விமானத்திலிருந்து குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின், சர்வதேச விமான நிலையத்தில் ஃபிரன்டியர் ஏர்லைன்ஸ் 1612 என்ற இந்த விமானம் இரவு கிளவ்லேண்டுக்கு புறப்பட தயாராக இருந்தது.

கேட்க மறுத்தார் மூதாட்டி

அப்போது விமானத்தில் ஏறிய மூதாட்டி ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வரும் அணில் ஒன்றையும் உடன் வைத்துக் கொண்டு விமானத்தில் ஏறியுள்ளார். இதனைப் பார்த்த விமான ஊழியர்கள், விலங்குகள் பயணிக்க அனுமதியில்லை என்று கூறியுள்ளனர். ஆனாலும் அந்த மூதாட்டி விமான ஊழியர்கள் கூறியதை கேட்க மறுத்துள்ளார்.

குண்டுகட்டாக வெளியேற்றினார்கள்

இதனால் மூதாட்டிக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மூதாட்டி விமானத்தை விட்டு இறங்கவும் மறுத்து விட்டார். இதன் பிறகு பொலிசாருக்கு விமானி தகவல் கொடுத்தார். பின்னர் விமானத்துக்குள் ஏறிய பொலிசார் மூதாட்டியைக் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். மூதாட்டியை போலீசார் வெளியேற்றும் காட்சிகள் தற்போது, இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

3060 total views