தொடர்ந்து வைரமுத்துக்கு எதிராக வரும் குற்றச்சாட்டுக்கு... சின்மயியை கலாய்த்து நெட்டிசன்கள் செய்த வேலை!

Report
344Shares

கவிஞர் வைரமுத்து பற்றி பாடகி சின்மயி கூறியுள்ள பாலியல் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் சின்மயின் டுவிட்க்கு கலாய்த்துள்ளனர்.

பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து 13 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தலத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளர் ஒருவரும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டார். இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இதன் பிறகு வைரமுத்து, உண்மையற்ற விஷ்யங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காலம் இதற்கு பதில் சொல்லும் என வைரமுத்து குறிப்பிட்டார்.

இருப்பினும் இதை விடாத சின்மயி வைரமுத்துவை பொய்யர் என விமர்சித்தார். அதன் பின்னர் சின்மயி-யின் தாயார் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது வைரமுத்து எனது மகளுக்கு பாலியல் அழுத்தம் கொடுத்தார் என கூறினார். ஆனால், இதனை அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மறுத்துள்ளார்.

வைரமுத்து எழுதிய சரசர பாடல் சின்மயி

இந்நிலையில், சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் “வைரமுத்து சார் எழுதிய சரசர சாரக்காத்து பாடலில் இடம்பெற்ற மொடக்கத்தான் சூப்பை நான் முயற்சி செய்து பார்க்கப் போகிறேன். அதன் சுவையை மறந்து விட்டேன்” என கடந்த 2011ம் ஆண்டு ஒரு பதிவை இட்டிருந்தார். அதாவது, களவானி படத்தில் இடம்பெற்று ஹிட் அடித்த ‘சரசர சாரக்காத்து’ பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். இந்த பாடலை சின்மயி பாடியிருந்தார்.

கிண்டலடித்த நெட்டிசன்கள்

2011ம் ஆண்டிற்கு முன்பே தனக்கு சுவிட்சர்லாந்தில் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் எனக்கூறியுள்ள சின்மயி, 2011ம் ஆண்டு எப்படி இப்படி டிவிட் செய்திருந்தார்? இது அட்மின் போட்டதா? எனக்கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

வைரமுத்து விவகாரத்தில் சின்மயி பொய் சொல்கிறார் எனவும், ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவின் மேல் கோபம் இருப்பதால் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் அவர் மீது அபாண்டமாக பழி சுமத்தி வருகின்றனர் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

12218 total views