
ரயில் ஒன்றில் சூனியக்காரி ஒருவர் பயணிப்பதை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பயணிகள் பார்த்தனர்.
சூனியக்காரி போல் அச்சு அசலான தோற்றத்துடன் கையில் ஒரு பொம்மையுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஒரு பெண் ஆடிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த பயணி ஒருவர் அவர் நிற்பதை வீடியோவாக எடுத்து இனி நான் இதில் பயணம் செய்ய மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
குறித்த வீடியோவில் சூனியக்காரி முறைத்துப் பார்த்தப்படி ஒரு நிற்கிறார். கருப்பு நிற உடையில், தலைவிரி கோலத்தில் முக்காடுடன் காணப்படும் அவரை அனைவரும் அச்சத்துடன் பார்த்துள்ளனர்.
சிலர் பயணம் செய்ய பயந்துக்கொண்டு இறங்கி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஹாலோவீன் பண்டிகைக்காக ஒரு அமைப்பு பல அச்சுறுத்தும் உருவங்களை உருவாக்கி வருவதும், அவை மக்களிடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சோதிப்பதற்காகவே இவ்வாறு செய்ததும் தெரியவந்துள்ளது.
Wtf. Never riding the jubilee line again. pic.twitter.com/QGvaHFi3Zt
— Jamie East (@jamieeast) October 4, 2018