கணவன், மாமனார், மாமியார் செய்த கொடுமை தாங்காமல்... பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி காணொளி!

Report
163Shares

கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை செய்வதாக வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை செய்துள்ளார்.

சென்னை ஆவடி அருகே கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை செய்வதாக 8 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு அவர் பெற்றோருக்கும் உருக்கமான வீடியோ எடுத்து வைத்துள்ள சம்பவம் கலங்க செய்துள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத். இவருக்கும் அம்பத்தூரை சேர்ந்த ஆனந்தி என்ற 39 வயது பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணமாகியுள்ளது. இருவரும் தேவநாத்தின் தந்தை சம்மந்தம், தாய் சிவகாமி ஆகியோருடன் செந்தில் நகர் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு வந்துள்ளது.

வெறுப்பாக நடந்த கணவன்

இதனால் தேவநாத் ஆனந்தியிடம் வெறுப்பாக நடந்து வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த ஆனந்தி வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் 8 பக்க பரபரப்பு கடிதம் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு 8 பக்க கடிதம் மற்றும் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார் ஆனந்தி. சம்பவத்தின் போது வாட்ஸ்ஆப்பில் தன் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் கடிதம் மற்றும் விடியோவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ஆனந்தியின் பெற்றோர் கூறுகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 10 ஆம் தேதி இருவருக்கும் திருமண நாள் வந்துள்ளது. அதிலும் கணவர் ஆனந்தியிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில் ஆனந்தி எழுதிய 8 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது, அக்கா மாமா நீங்க என் அம்மா அப்பாவுக்கு சமமானவர்கள். அக்கா மாமா நான் இந்த தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருந்த என் மாமியார், மாமனார், என் புருஷன் இவங்க மூன்று பேரையும் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி தாங்க.

அப்ப தான் எந்த மருமகளுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்காது. அப்புறம் பீரோ லாக்கர்ல ஒரு லெட்டர் இருக்கு அதை சாட்சியா எடுத்துக்கங்க, ரெண்டு வீடியோவும் இருக்கு.

என் மாமியார் கொடூர குணம் கொண்டவுங்க, என் மாமனார் பொண்டாட்டிக்கு பயப்படும் பயந்தாகோலி, என் புருஷன் அம்மா அப்பாவுக்கு பயந்த கோழை, ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா இந்த கோழைக்கு மனைவியா வாழ்ரத விட சாகரதே மேல்.. டாட்டா பாய் மை சுவிட் ஃபேமலி..

இவ்வாறு ஆனந்தி தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார். அதேபோல் வீடியோவில் எனது கடைசி சிரிப்பை பார்த்து கொள்ளுங்கள். இந்த வீட்டில் எனக்கு சந்தோஷம் இல்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

5595 total views