அபிராமி சுந்தரத்துக்கு மத்தியில் இப்படி ஒரு கள்ளக்காதல் ஜோடியா? அதிர்ச்சியான சோக சம்பவம்!

Report
379Shares

கள்ளக்காதல் விவகாரத்தால் உடலில் மின்சாரத்தை பாய்த்து கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. குன்றத்தூர் அபிராமியின் கள்ளக்காதல் வெறியாட்டம் பெரும் அதிர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தொடர்ந்து கள்ளக்காதல் தொடர்பான கொலைவெறிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளது.

கரும்பு வெட்டும் தொழிலாளி

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(38), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள். அந்தியூர் அருகே உள்ள அத்தாணிக்கு சுரேஷ் கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.

அப்போது அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மனைவி ஜோதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இது குறித்து மாரியாம்மாளுக்கு தெரிய வந்ததும் சுரேஷை கண்டித்து உள்ளார்.

கோபித்து சென்ற மனைவி

ஆனால் ஜோதியுடனான கள்ளத்தொடர்பை சுரேஷ் கைவிடவில்லை. மேலும் குடித்துவிட்டு வந்து குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். இதனால் சுரேஷிடம் கோபித்துக்கொண்டு மாரியம்மாள் தனது அண்ணன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மனைவியை கண்டித்த கணவர்

இதற்கிடையே ஜோதியின் கள்ளக்காதல் விவகாரம் அவருடைய கணவர் சின்னச்சாமிக்கும் தெரியவந்தது. அவர் ஜோதியை கண்டித்தார். இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தனது கணவரின் எதிர்ப்பு பற்றி ஜோதி, தனது கள்ளக்காதலன் சுரேஷிடம் கூறினார்.

தற்கொலை செய்துகொள்ள முடிவு

இதைத்தொடர்ந்து தனது மனைவிக்கும் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததாக கூறி வருத்தப்பட்டுள்ளார் சுரேஷ். கள்ளக்காதலை கைவிட முடியாமல் தவித்த அந்த ஜோடி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை மாலை வீட்டைவிட்டு வெளியேறினார் ஜோதி.

2 பேரும் உடல்கருகி பலி

பின்னர் அவரும், சுரேஷும் ஒன்று சேர்ந்து அத்தாணி அருகே உள்ள வரதன் தோட்டம் என்ற பகுதிக்கு சென்றனர். அங்குள்ள மின் கம்பத்தில் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து 2 பேரும் தங்களுடைய உடலில் பாய்ச்சினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உடல் கருகி இறந்தனர்.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்றுவிட்டு கணவரையும் கொல்ல முயன்ற அபிராமி - சுந்தரம் கள்ளக்காதலுக்கு மத்தியில் இப்படியொரு கள்ளக்காதலா? என்று கூறிவருகிறார்கள்..

17265 total views