’நான் விரும்பும் தலைவர் விஜய்’... தேர்வு விடைத்தாளில் எழுதிய சிறுவன் வேகமாக பரவி வரும் புகைப்படம்...!

Report
173Shares

`தான் விரும்பும் தலைவர் விஜய்’ என்று மாணவர் ஒருவர் தனது தேர்வு விடைத்தாளில் பதிலளித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய். இளைஞர்கள், பெண்கள், குழைந்தைகள் என அனைவருக்கும் விஜய்க்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் படங்கள் வெளியாகும் தினத்தை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருவதும் வழக்கமான ஒன்று. இதுதவிர விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழைவெள்ளத்தின் போது விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கி நிவாரணப் பொருட்களை அளித்திருந்தனர்.

இந்நிலையில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பரீட்சையின் போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு விஜய் பெயரை எழுதியதாக சமூக லைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் `நீ விரும்பும் தலைவர்களுள் ஒருவர் பற்றி கட்டுரை வரைக’ என கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த அந்த மாணவன். ``நான் விரும்பும் தலைவர் விஜய். அவர் அழகாக இருப்பார்’’ என்று எழுதி இருக்கிறார்.

தற்போது இந்த விடைத்தாளின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது...

7498 total views