செண்ட்ராயன் வெளியேற்றத்திற்கு முன்பு மேடையில் நடந்தது என்ன?... அம்பலமாகிய மறைக்கப்பட்ட ரகசியம்

Report
2395Shares

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் செண்ட்ராயன் வெளியேறியது மக்களால் இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லை. ஏனென்றால் ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தனர், ஆனால் அவர் வெளியேறவில்லை என்றாலும் பரவாயில்லை, அவருக்கு பதில் மும்தாஜ் அல்லது விஜயலட்சுமி வெளியேறியிருந்தால் கூட இவ்வளவு ஆதங்கம் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால் 1 சதவீதம் பேர் கூட எதிர்பார்க்காத செண்ட்ராயன் வெளியேற்றம் என்றவுடன் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அனைத்து நபர்களுக்கும் கடும் அதிர்ச்சியாம்

இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் டுவிட்டர் தகவலின்படி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு நிகழ்ச்சி அமைப்பாளர்களுடன் கமல் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்ததாகவும், கடைசியில் சென்ட்ராயன் பெயரை கூவிட்டு அந்த கார்டை கோபத்தில் தூக்கி எறிந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அதே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் மும்தாஜை கமல் வறுத்தெடுத்தார் என்பதை அவதானித்தோம். ஆனால் நாம் பார்த்ததெல்லாம் கொஞ்சம் தானாம். நிஜத்தில் கமல் கடும் கோபத்தில் இருவரையும் தாளித்து எடுத்துவிட்டதாகவும், அந்த காட்சிகள் எல்லாம் எடிட்டிங்கில் கட் செய்யப்பட்டுவிட்டதாகவும் நேரில் பார்த்தவர்களின் டுவிட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் செண்ட்ராயனுக்கு கமல் கூடுதல் பேமெண்ட் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் கமல்ஹாசனின் விருப்பமின்றியே அன்றைய தினம் சென்ட்ராயன் வெளியேற்றம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் இப்படியொரு மோசடியான நிகழ்ச்சியில் இனியும் தொடராமல் அவர் வெளியேறினால் அவரது மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்பதே பலரது கருத்தாகும்.

இந்த வாரம் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்..