பிக் பாஸ் ஐஸ்வர்யாக்கு ஓட்டு போட்டால் பணம் கிடைக்குமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Report
430Shares

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட பணம் கொடுக்கப்படுகிறதா? பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யாவை வெளியேற்ற விரும்பி பார்வையாளர்கள் ஓட்டு போட்டார்கள். ஆனால் ஐஸ்வர்யாவை காப்பாற்ற அதிகமானோர் ஓட்டு போட்டதாக நம்மையே ஏமாற்றிவிட்டு அவரை காப்பாற்றிவிட்டார்கள். ஐஸ்வர்யாவுக்கு எப்படி அவ்வளவு ஓட்டு கிடைத்தது என்று யாருமே வியக்கவில்லை.

பிக் பாஸே காப்பாற்றுகிறார்களா?

ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக் பாஸே கள்ள ஓட்டு போட்டிருப்பார் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் பார்வையாளர்கள். பிக் பாஸ் அணியே ஓட்டு போட்டு காப்பாற்றியிருக்கலாம் என்று முன்னாள் போட்டியாளரான காஜல் கூட தெரிவித்தார். இந்நிலையில் தான் ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போடுவது குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஓட்டுக்கு பணம்

தினமும் ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட்டு பேடிஎம் ரீசார்ஜில் ரூ. 50 பெறவும். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். விஜியை வெளியேற்ற வேண்டும். அவரின் ஆங்கிலம் சகிக்கவில்லை என்று ஒருவர் ட்வீட்டினார். அடப்பாவிகளா, இங்கேயும் ஓட்டுக்கு பணமா என்று அதிர்ச்சி அடைந்த வேகத்தில் மேலும் ஒருவர் அதிர்ச்சி கொடுத்தார்.

மேற்கு வங்கம்

ரூ. 50 ரீசார்ஜ் ட்வீட்டை பார்த்த ஒருவர் நாங்கள் ஏற்கனவே பீம் ஆப் மூலம் ஓட்டுக்கு ரூ. 100 கொடுத்து வருகிறோம். மேற்கு வங்கத்தின் கிராமப்புற பகுதிகளில் இந்த வாரம் அந்த தொகையை ரூ. 200 ஆக உயர்த்துகிறோம். ஐஸ்வர்யாவை காப்பாற்றுவோம் என்று ட்வீட்டியுள்ளார். எது எதுக்கு பணம் கொடுப்பது என்று விவஸ்தையே இல்லாமல் போச்சே. நிஜமாகவே பணம் கொடுக்கிறார்களா? என்று அனைவரும் பேசப்பட்டு வருகிறார்கள். சிலரே இதுக்குமா ஓட்டுக்கு காசு கொடுப்பது என்று திட்டி வருகிறாரகள்.

ரம்யா ஐஸ்வர்யாவுக்கு கள்ள ஓட்டு போடுகிறார்கள் என்று நினைத்தால் பணம் கொடுக்கப்படுகிறது என்று வெளியான ட்வீட்டுகளை பார்த்து முன்னாள் பிக் பாஸ் 2 போட்டியாளரான ரம்யா அதிர்ச்சி அடைந்து 'வாட்' என்று ட்வீட்டினார். பின்னர் என்ன நினைத்தாரோ அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். இது என்ன புது கூத்து பிக் பாஸ்?

இந்த வாரம் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்..

17167 total views