4 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாயின் காதலன்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Report
186Shares

ஹைதரபாத்தில் 4 வயது குழந்தையின் மீது, தாயின் காதலன் இரும்புக்கம்பியால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதரபாத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது வேறு ஒரு ஆணுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தனது முதல் கணவன் மூலமாக 4 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கும், அவரது காதலருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சனைகள் வந்துள்ளது. இதனால் இருவரும் தங்களது கோபத்தை 4 வயது குழந்தையின் மீது காட்டத் தொடங்கியுள்ளனர்.

மேலும் நேற்றும் வழக்கம்போல அந்த இளம்பெண்ணுக்கும், அவரது காதலருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட, வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையின் மீது இருவரும் இரும்புக்கம்பியால் சூடு வைத்துள்ளனர். அத்துடன் விடாமல் குழந்தையை அடித்தும், கிள்ளியும் துன்புறுத்தியுள்ளனர்.

குழந்தையின் கதறல்

குழந்தையின் அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, குழந்தைக்கு சூடு வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அருகிலிருக்கும் ஒரு அரசியல்வாதியின் மூலமாக அச்சுயூத்தா ராவ் (Achyutha Rao) என்ற குழந்தை செயற்பாட்டாளருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தார்.

தற்போது குழந்தையின் தாய் மற்றும் அவரது காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தை செயற்பாட்டாளர் ராவ் கூறுகையில், பெரியவர்கள் இடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு எப்போதும் குழந்தைகள் தான் அதிகமாக பாதிப்புக்கு ஆளாகின்றனர். திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்த பிறகு, அதிலிருந்து வெளியேற ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு என்றாலும் அதிலும் பெரும்பாலும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.

6377 total views