பிக்பாஸ் சென்றாயனுக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி... பூரித்துப்போன தருணம்

Report
1415Shares

பிக்பாஸால் ஏமாற்றப்பட்ட சென்றாயனை சந்தித்து சிம்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து நேற்று முன்தினம் சென்றாயன் வெளியேற்றப்பட்டார். உண்மையாக பார்த்தால் ஐஸ்வர்யா தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். இது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை பார்த்து வரும் கோலிவுட் பிரபலங்கள் பலரும் சென்றாயனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் கள்ள ஓட்டு போட்டு ஐஸ்வர்யாவை ஜெயிக்க வைத்திருக்கலாம். ஆனால் சென்றாயன் மக்களின் மனதை வென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

சிம்பு பரிசு

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வேகத்தில் சென்றாயன் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். சிம்பு அவருக்கு திருமூலரின் திருமந்திரம் புத்தகத்தை பரிசளித்துள்ளார். அப்போது மகத்தும் உடனிருந்திருக்கிறார். என் நண்பன் சிம்பு சென்றாயனை வரவேற்றார் என்று கூறி அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மகத்.

பிக்பாஸால் கைவிடப்பட்ட சென்றாயனை சிம்பு சந்தித்து பரிசு கொடுத்ததை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக கூறி வருகிறார்கள்.

51752 total views