உடம்பில் இவர்கள் டாட்டூ குத்திய இடங்களை பார்த்தீங்களா? இப்படியா கண்ட இடங்களில் குத்துவது...!

Report
198Shares

டாட்டூ எனப்படும் பச்சை குத்திக்கொள்ளுதல், இப்போது இளைய தலைமுறை மத்தியில் ஃபேஷன்! சில மணி நேரங்களில் விதவிதமான டிசைன்கள், பெயர்களை டாட்டூவாகக் குத்திக்கொள்வது பெருமைக்குரிய விஷயமாகப் பலரும் கருதுகிறார்கள்.

நாகரிக மோகத்துக்காக டாட்டூ குத்திக்கொள்கிறார்கள். சிலரோ மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி ஸ்பெஷலாகக் காட்டிக்கொள்வதற்கும் ஒரு செய்தியை வெளிப்படுத்தும் விதமாகவும் டாட்டூ குத்திக்கொள்கின்றனர்.

டாட்டூ குத்துவது என்பது நமக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தான். நம் ஊர்களில் காலம், காலமாக பச்சை குத்தி வந்த வழக்கம் தான், இன்று பல தரப்பட்ட வண்ணங்களில், பல டிசைன்களில் ஒரு பெரும் வளர்ச்சி கண்ட டாட்டூவாக மாறி இருக்கிறது.

நம் தாத்தா, பாட்டி காலத்தில், பெயர், சிலர் அடையாளங்கள், குறிகள், வேல், திரிசூலம் போன்ற கடவுளின் கையில் இருக்கும் பொருட்கள் போன்றவற்றை பச்சைக் குத்தி வந்தனர். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்த மாதிரியான டிசைனையும், உடலின் எந்த பாகத்திலும் டாட்டூவாக குத்தும் நிலைமை உருவாகி இருக்கிறது. உடல் முழுக்க டாட்டூ குத்திக் கொண்டு கின்னஸ் சாதனை செய்தவர்கள் எல்லாம் கூட இருக்கிறார்கள்.

ஏன், உடலின் ஏடாகூடமான இடங்களில் எல்லாம் டாட்டூ குத்திக் கொண்டு திரிபவர்களையும் நாம் காண இயல்கிறது. உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் டாட்டூக் குத்திக் கொள்ளலாம் என்பதற்காக கண்டமேனிக்கு குத்திக் கொள்ள கூடாது. அப்படி குத்தினால் என்ன ஆகும் என்பதை இங்கே இவர்களது டாட்டூ அனுபவத்தை கண்டு நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

அப்படி எந்தெந்த இடங்களில் இவர்கள் எங்கெல்லாம் டாட்டூ குத்தி இருக்கிறார்கள் என்று பாருங்கள்..

கலாசார டாட்டூ
வெவ்வேறு பண்பாட்டை சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக வெவ்வேறு வகையில் டாட்டூ குத்திக்கொள்கிறார்கள். மக்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும், வெவ்வேறு சடங்குகளின்போதும் டாட்டூக்கள் குத்தப்படுகின்றன.

loading...