16 வயதினிலே படத்தில் கமலுக்கு முன் இந்த காமெடி ஜாம்பவான் தான் நடிக்க இருந்தார்..! உங்களுக்கு தெரியுமா?

Report
606Shares

தமிழ் சினிமா இயக்குனர்களில் இயக்குனர் பாரதி ராஜாவின் படைப்புகள் என்றும் காலத்தால் அழியாத ஒன்றாகும். கிராமத்து கலாச்சாரத்தை தனது படங்களில் ரசிகர்களின் கண்முண்ணே கொண்டுவருவதில் இவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை.

பாரதி ராஜா படைப்புகளில் ரஜினிக்கும், கமலுக்கும் ஒரு முக்கிய படமாக அமைந்தது 16 வயதினிலே தான். அந்த படத்தில் சப்பாணி என்ற கதாபாத்திரம் கமலுக்கு ஒரு மிக பெரிய புகழை ஏற்படுத்தி தந்தது. சப்பாணி கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் இயக்குனர் பாரதி ராஜா ஒரு ஸ்வாரசியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குனர் மங்களேஸ்வரன் இயக்கத்தில் மரகதக்காடு என்ற படம் உருவாகியுள்ளது. அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ போன்ற நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும், இந்த படத்தின் இசையை இயக்குனர் பாரதி ராஜா வெளியிட்டிருந்தார்.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் பாரதி ராஜா, இந்த விழாவில் நான் பேசலாமா வேண்டாமா என்று யோசித்தேன் ஆனால், இப்படி ஒரு அழகான படத்தை எடுத்துளளார் என்று தெரிஞ்சும் நான் பேசாமல் போனால் நல்லா இருக்காது. இந்த படத்தை இயக்குனர் அருமையாக ரசித்து எடுத்துளளார். இந்த படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களை பார்க்கும் போது தான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.

கமல் அழகாக இருந்ததால் தான் அவரை நான் சப்பாணியாக நடிக்க வைத்தேன். அழகாக இருப்பதை சற்று அழகாக்கி காண்பித்தால் மக்களுக்கு பிடித்து போய்விடுகிறது.இதே அந்த படத்துள சப்பானியா, நாகேஷை போட்டிருந்தாள் ஜனங்க எழுந்து போய்ட்டிருப்பாங்க. அந்த படத்தை நான் முதலில் பிளாக் அண்ட் ஒயிட்ல தான் எடுக்கலாம்னு யோசிச்ச போது சப்பானியா நாகேஷை தான் போடலாம்னு இருந்தேன். ஆனால், கடைசியில் கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செஞ்சேன் என்று பேசியுள்ளார் இயக்குனர் பாரதி ராஜா.

19738 total views