பிராச்சியிடம் வசமாக அடி வாங்கிய மஹத்... பிராச்சி பிரேக் அப் என்று கூறியதற்கு பின்பு இவ்வளவு சம்பவம் நடந்துள்ளதா?

Report
170Shares

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மஹத் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மஹத் காதலைச் சொன்னதால் இனி மஹத்துக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை என, அவரது காதலி பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பின்னர் சிம்பு, ரம்யா ஆகியோரை மஹத் சந்தித்து அடியும் வாங்கியுள்ளார்.

அதே போல் தனது காதலி பிராச்சியையும் சந்தித்து அவரிடம் இதை விட அதிகமாக அடிவாங்கியது உங்களுக்கு தெரியுமா?... ஆம் அவரிடம் அடி வாங்கியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பிராச்சி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட காதல்முறிவினைப் பற்றி கூறுகையில், நான் உள்ளே நான் நானாகவே இருந்தேன். அதனால் தான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்றும், யாஷிகா மீது வந்த பீலிங்ஸையும் மறைக்காமல் வெளியே கூறினேன்.

இதனை அவதானித்த சிலர் பிராச்சிக்கு தவறான குறுந்தகவலை அனுப்பியது மட்டுமின்றி வெளியிடங்களிலும் தொந்தரவு செய்துள்ளனர். மஹத் தான் உன்னை விட்டு சென்று விட்டானே நீ வருகிறாயா என்று கேள்வி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே பிராச்சி அவ்வாறான தகவலை வெளியிட்டார் என்று தற்போது நாங்கள் இருவரும் இணைந்துவிட்டோம் என்றும் மஹத் கூறியுள்ளார்.

6360 total views